மொட்டு கட்சி கருகிவிட்டது: நாமல் அல்ல

Spread the love

மொட்டு கட்சி கருகிவிட்டது. எனவே, நாமல் அல்ல எந்த கொம்பன் வந்தாலும் அக்கட்சியால் மீண்டெழ முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ பஸில் அல்ல, நாமல் அல்ல எந்த கொம்பன் வந்தாலும் மொட்டு கட்சியை கட்டியெழுப்ப முடியாது. மொட்டு கட்சியின் கதை முடிந்துவிட்டது. அது மீண்டும் மலராது. ஏனெனில் மக்கள் ராஜபக்சக்களையும், மொட்டு கட்சியையும் நிராகரித்துவிட்டனர்.

அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்பட வேண்டும். பஸிலின் தேவைக்கேற்ப தேர்தல்களை நடத்த முடியாது. ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படும் என நாம் நம்புகின்றோம்.” – என்றும் விஜித ஹேரத் கூறினார்.