வைத்தியசாலை பணியாளர் மீது தாக்குதல்!

Spread the love

யாழ்ப்பாணம் – குறிகட்டுவான் இறங்குதுறையில் வைத்து, புங்குடுதீவு வைத்தியசாலை பணியாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நயினாதீவில் வசிக்கும் குறித்த பணியாளர் நேற்று (31) ஞாயிற்றுக்கிழமை , படகின் மூலம் குறிகட்டுவான் இறங்குதுறையில் வந்திறங்கிய வேளை, அங்கு காத்திருந்த இருவர் பணியாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடற்படையினர், பொதுமக்கள் முன்னிலையில் குறித்த இருவரும் பணியாளர் மீது சரமாரியாக தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பணியாளர் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.