தேர்தலில் போட்டியிட நாமலுக்கு இன்னும் காலம் தேவை – மஹிந்த ராஜபக்ஷ

Spread the love

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் தேவை என, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று (07) , ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகின்றேன்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் எந்த செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், எந்த பிரச்சினையும் இல்லை.

அவர்கள் 10 கூட்டணிகளை அமைத்தாலும் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.