கனடாவில் குரங்கம்மை நோய் தொற்று பரவும் அபாயம்

Spread the love

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குரங்கம்மை தொற்று குறித்து பரிசோதனைகளை நடத்துமாறு பொதுச் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.

கடந்த ஜனவரி முதல் மாகாணத்தில் 26 நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டில் மொத்தமாகவே 33 குரங்கம்மை நோயாளர்களே மாகாணத்தில் பதிவாகியிருந்தனர்.

ஒப்பீட்டளவில் இந்த ஆண்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குரங்கம்மை தொற்றாளர்கள் அதிகளவு பதிவான பகுதியாக ரொறன்ரோ காணப்படுகின்றது.