யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்
சுன்னாகம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவான் தெற்கு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
63 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.