சஜித்துக்கு ஹரின் ஆலோசனை!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டால் அது சஜித்துக்கே சாதகமாக அமையும். எனவே, இது தொடர்பில் அவர் சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்னும் அதிகாரப்பூர்வமாக பேச்சுகள் ஆரம்பிக்கப்படவில்லை. எனினும், உத்தியோகப்பூர்வமற்ற ரீதியில் சந்திப்புகள் இடம்பெறுகின்றன.
ரணிலுடன் இணைந்து செயற்படாவிட்டால் சஜித் பிரேமதாச தனிமைப்படுத்தப்பட்டுவிடுவார். எனவே, ரணிலுடன் பயணித்து அவர் அனுபவத்தை பெறுவதே சிறந்தது.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே பொது வேட்பாளராக போட்டியிடுவார்.” – என்றார்.