பஸிலின் முயற்சி தோல்வி
ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மனுச நாணயக்கார அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
“ அதற்கான சாத்தியம் இல்லை. ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும். ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரே பொதுத்தேர்தல். இது பற்றி கலந்துரையாடல்கூட இல்லை. ஏனெனில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தலை நடத்துமாறு மொட்டு கட்சி ஆரம்பத்தில் யோசனை முன்வைத்திருந்தது. எனினும், கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. ஆகவே இது குறித்து சந்தேகம் வேண்டாம். நான் அமைச்சரவையில் இருக்கின்றேன். ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.” – என்றார்.