ரணிலுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்

Spread the love

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தாம் கருதுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மீரிகம தொகுதி உறுப்பினர்களுக்கு கட்சியை வலுப்படுத்துவது தொடர்பில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நிலையான அரசாங்கம் அமைய வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தலின் மூலம் நிலையான அரசாங்கம் உருவாகாது எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதன் மூலம் நாட்டில் மீண்டும் ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்க முடியும் என தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தாம் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதில்லை எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.